Friday, October 27, 2017

வாட்ஸ் அப்பில் விரைவில் குரூப் கால் வசதி

வாட்ஸ் அப் நிறுவனம் தனது ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே உள்ளது. ஏற்கனவே லைவ் லோகேஷன்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்த வாட்ஸ் அப் தற்போது குரூப் வாய்ஸ் கால் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.



வாட்ஸ் அப்-இன் புதிய 2.17.70 என்ற வெர்ஷனில் இந்த குரூப் வாய்ஸ் கால் வசதி விரைவில் வரவுள்ளது. இந்த புதிய 2.17.70 ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் குரூப் வாய்ஸ் கால் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த குரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் வீடியோ கால் அம்சம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாகவும் சமூக வலைத்தள செய்திகள் கூறுகின்றன.

இந்த புதிய வசதியான குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்கப்படுவதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டில் இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்பகிறது.

ஏற்கனவே பேஸ்புக்கில் இதே போன்ற அம்சம் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் வாட்ஸ் அப் கால் அழைக்கும்போது பயனாளிகள் வேறு எண்ணுடன் பேசி கொண்டிருந்தால் அவருக்கு இந்த புதிய கால் குறித்து தகவல் அனுப்பப்படும்

இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டால் வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு மிகுந்த உபயோகம் உள்ளதாக இருக்கும். இந்த வசதி ஐஒஎஸ் போன் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்களுக்கும் இந்த வசதி தற்போதே அறிமுகம் செய்யப்படுமா? என்பது குறித்த தகவல் இனிமேல்தான் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லைவ் லொகேஷன் ஷேர் வசதியில் பயனாளிகள் மிகுந்த பயன் பெற்று வருகின்றனர். ஏற்கனவே நாம் இந்த வசதி குறித்து விரிவாக பார்த்துள்ளோம். இதேபோல் இன்னும் பல வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டு கொண்டிருக்கின்றது

No comments:

Post a Comment