Thursday, October 26, 2017

2.0 படத்தில் எத்தனைப் பாடல்கள் தெரியுமா? என்ன சொல்கிறார் ஏஆர் ரஹ்மான்?


துபாய்: 2.0படத்தில் எத்தனைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார்.

 2.0 டத்தின் செய்தியாளர் சந்திப்பு துபாயில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் இந்தப் படத்தில் எத்தனைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்று கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான், "ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமான அனுபவம். எனக்குள் எப்போதுமே ஒரு பாஸிடிவ் எனர்ஜி வந்துவிடும், அவருடன் பணியாற்றும்போது.

 இந்தப் படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 2 நாளை வெளியாகும். மற்றொன்றை பின்னர் வெளியிடுவோம். இவை தவிர சின்னச் சின்ன பாடல்கள் சில இடம் பெறும்," என்றார்.




No comments:

Post a Comment